• Wed. Apr 24th, 2024

மதுரையில் சர்வதேச செஸ்பேட்டி பரிசளிப்பு விழா

Byகுமார்

Jul 7, 2022

மதுரையில் சர்வதேச செஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது
மதுரையில்காளவாசல் பகுதியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் ஏதென்ஸ் ஆப் ஈஸ்ட் 2-வது சர்வதேச கிராண்ட் மாஸ்டர் ஓபன் செஸ் போட்டிகடந்த ஐந்து நாட்களாக நடைபெற்றது. இதில் இந்தியா, ரஷியா, பெலாரஸ், அமெரிக்கா, சிங்கப்பூர், வங்களாதேசம், ஸ்விடன், ஸ்ரீலங்கா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா , அமெரிக்கா, நேபால், வியாட்னம், ஆர்மோனிய கிர்கிஸ்தான் மற்றும் கலிபோர்னியா உள்ளிட்ட 15 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். உலக தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள தமிழ் நாட்டின் மதுரையே சோர்ந்த தீபன் சக்கரவர்த்தி, ரஷியாவை சேர்ந்த போரீஸ், பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த அலெக்சி பெடரோ, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நீலோத் பல்தாஸ் மற்றும் 13 கிராண்ட் மாஸ்டர்ஸ், 13 சர்வதேச மாஸ்டர்ஸ், 2 பெண் கிராண்ட் மாஸ்டர்கள் உள்ளிட்ட தலைசிறந்த வீரர்கள் இதில் கலந்து கொண்டனர்.


10 சுற்றுகளாக நடைபெறும் இந்தத் தொடரில் முன்னிலை பெறும் வீரர்கள் கிராண்ட் மாஸ்டர் மற்றும் சர்வதேச மாஸ்டர் பட்டங்களைப் பெறத் தகுதி பெறுவர் .இதற்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது இந்த பரிசளிப்பு விழாவில் உலக சதுரங்க கழக துணை தலைவர் D.V. சுந்தர் ஆலோசனைப்படி போட்டிகளில்வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இந்த பரிசளிப்பு விழாவில் தமிழ்நாடுமாநில சதுரங்கம் கூட்டமைப்பின் ஸ்டீபன்பாலசாமி மற்றும் அகில இந்திய சதுரங்க செயலாளர் பரத்சிங் சவுகான் ஆகியோர் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் ரொக்கப் பரிசு மற்றும் கோப்பைகள் வழங்கினார்கள்


இவ்விழாவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் P.பிரகதீஷ், செய்தியாளர்களிடம் கூறியதுதமிழ்நாட்டில் மதுரையில் சர்வதேச சதுரங்கம் போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் A,B,இரண்டு பிரிவுகளாக பிரிக்கபட்டு போட்டிகள் நடைபெற்றது.இந்த போட்டியில் வெளிநாட்டைச் சேர்ந்த 35 வீரர்கள் கலந்து கொண்டனர்.இதில் முதல் பரிசினை மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த அரோநாயக்கோஸ் இரண்டாவது பரிசினை ஹரிமாதவன் மூன்றாவது பரிசினை வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் வெற்றி பெற்றனர். இவர்களுக்கு ரொக்கப் பரிசு மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டது இந்த சர்வதேச போட்டியின் முக்கிய நோக்கம் கிராண்ட்மாஸ்டர் சர்வதேசமாஸ்டர் அதைத் தொடர்ந்து நாம்பட்டத்தை வெல்வது இதனை ஹரிமாதவன் நாம் பட்டத்தை வென்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *