• Wed. Dec 11th, 2024

ஹிந்தி தெரியாமல் ஹிந்தி பேசி மாட்டிக்கொண்ட டிஜிபி – கடிந்துகொண்ட முதல்வர்

Byமதி

Nov 27, 2021

சட்டம் ஒழுங்கு மற்றும் காவல்துறை விவகாரங்கள் குறித்து ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசால் நடத்தப்படும் மாநில டிஜிபிக்கள் மாநாடு உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் கடந்த 20ஆம் தேதி நடைபெற்றது. 56ஆவது மாநில காவல்துறை தலைவர்கள் மாநாட்டில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இரண்டு நாட்கள் நடைபெற்ற அந்த மாநாட்டில் தமிழகத்தின் சார்பில் கலந்து கொண்ட டிஜிபி சைலேந்திர பாபு, மாநாட்டில் இந்தியில் பேசியுள்ளதாக தெரிகிறது. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் அவருக்கு இந்தி மொழி தெரியாது என்பதுதான். ஆனாலும், வலதுசாரி சிந்தனை கொண்ட ஏடிஜிபி ஒருவரின் உதவியுடன் அவர் இந்தியில் எழுத்திக் கொடுத்த பாயிண்டுகளை கச்சிதமாக அப்படியே சைலேந்திர பாபு பேசியதாக தெரிகிறது.

இந்த விஷயம் முதல்வர் ஸ்டாலினின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கும் கோட்டை வட்டாரத் தகவல்கள், தகவலறிந்து சைலேந்திர பாபுவை உடனடியாக அழைத்த ஸ்டாலின், இந்தியில் பேசியது தொடர்பாக அவரிடம் விளக்கம் கேட்டதுடன், லேசாக கடிந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளன. மேலும், அவருக்கு சில அறிவுறுத்தல்களையும் முதல்வர் ஸ்டாலின் வழங்கியதாகவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.