ஐந்து அறிவு விலங்களுக்கு இருக்கும் பாசம் 6 அறிவு மனிதனுக்கு கூட இருக்காது. அதற்கான உதாரணம் தான் இந்த நிகழ்வு.
சந்தவாசல் படவேடு சாலையிலுள்ள காட்ரோடு பகுதியில் மல்லிகா லஷ்மி என்பவர் வசித்து வருகிறார்.ஆடுகளை வளர்த்துவரும் இவர் நாய் ஒன்றையும் வளர்த்து வருகிறார். இந்நிலையில் நாயும் ஆடும் ஒரே சமயத்தில் குட்டிளை ஈன்றன. இதையடுத்து, வீட்டில் ஒரு புறத்தில் ஆடு தனது குட்டியோடும், மறுபுறத்தில் நாய் தனது குட்டிகளோடும் இருந்தன.
இந்நிலையில், ஆடு தனது குட்டிகளுக்கு சரிவர பால் கொடுக்காததால் ஆட்டுக் குட்டி பால் கிடைக்காமல் பசியால் வாடியது. இதைப்பார்த்த அருகிலிருந்த தாய் நாய், தன்னுடைய குட்டிகளுக்கு எப்படி பால் கொடுக்குமோ அப்படியே ஆட்டு குட்டிக்கும் பால் கொடுத்து வருகிறது.இது குறித்த அறிந்த அப்பகுதி மக்கள் அந்த நாயை ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கினறனர்.