• Sun. Aug 23rd, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

முருகப் பெருமான் பெருமை கூறும் பக்திப் பாடல் குறுந்தகடு வெளியீடு…

Byadmin

Aug 20, 2022

முன்னிட்டு முருகப் பெருமான் பெருமை கூறும் பக்திப் பாடல் குறுந்தகடு வெளியீடு – பாடல்களை மெய்மறந்து கேட்ட முருக பக்தர்கள்..

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணித்திருவிழா வெகு சிறப்பாக நடை பெற்று வருகின்றது.விழாவின் ஒவ்வொரு நாளும் கோவில் கலையரங்கில் இன்னிசை நிகழ்ச்சி நடை பெற்று வருகின்றது. இந்நிலையில் முருகன் புகழ் பாடும் அருணகிரி நாதர் எழுதிய திருப்புகழ் பாடல்களை பலராம் என்பவர் பாட்டு பாடி இசையும் அமைத்துள்ளார். இவர் பாடிய முருகப்பெருமானின் பெருமை கூறும் இசையுடன் கூடிய திருப்புகழ் பாடல்கள் அடங்கிய குறுந்தகடு பக்தர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது. இந்த குறுந்தகடு வெளியீட்டு விழாவில் திருச்செந்தூர் நகராட்சி துணை சேர்மன் ரமேஷ் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் மற்றும் முருக பக்தர்கள் பலரும் பக்தியுடன் கலந்து கொண்டனர். முருகப் பெருமான் சிறப்பை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் இவர் பாடல்களை உருக்கமாக மேடையில் பாடிய போது முருக பக்தர்கள் மெய்மறந்து தாளமிட்டு லயித்து கேட்டு ரசித்தனர்.