• Thu. Aug 27th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

ரேஷன் கடையில் வாங்கிய அரிசியில் வண்டுகள்…. பொதுமக்கள் அதிர்ச்சி!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இதில் ஜக்கம்பட்டியைச் சேர்ந்த வார்டுகளில் உள்ள ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி விநியோகம் நடைபெற்றது .அப்போது அரிசியில் வண்டுகள் மொய்த்ததால் அதனை வாங்கி சென்ற பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர் உடனே வந்து ரேஷன் கடைகளில் இது குறித்து புகார் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது .இதனைத் தொடர்ந்து ரேஷன் கடைக்காரர் அரிசியை திரும்ப பெற்றுக் கொண்டு, நல்ல அரிசியை வழங்கினார். இதனால் பொதுமக்கள் திருப்தியுடன் திரும்பி சென்றனர். .