• Sun. Jul 20th, 2025
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.56 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.27 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.28 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (1)
previous arrow
next arrow

பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதி

ByP.Kavitha Kumar

Jan 6, 2025

பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு வருகிற 11-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

வத்திராயிருப்பு பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. இந்த கோயிலில் அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் ஆகிய முக்கிய நாட்களில் மட்டுமே பக்தர்கள் மலையேறிச் சென்று தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். இதனை முன்னிட்டு பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு வருகிற 11-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய கோயில் நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் அனுமதி வழங்கி உள்ளனர்.

எனவே, பக்தர்கள் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே மலையேறி செல்ல அனுமதி உண்டு. இரவு நேரத்தில் பக்தர்கள் கோவில் வளாகப்பகுதியில் தங்குவதற்கு அனுமதி கிடையாது. மலைப்பாதையில் உள்ள நீரோடை பகுதிகளில் பக்தர்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட நாட்களில் எதிர்பாராதவிதமாக மழை பெய்தால் அனுமதி ரத்து செய்யப்படும். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.