ஆனைமலை மாசாணியம்மன் கோவில் கும்பாபிஷேகம் அறநிலை துறை அமைச்சர் பங்கேற்ப்பு, விழாவிற்கு 1000க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு
தமிழகத்தில் மிகவும் பிரபலமான கோவில்களில் மிகவும் முக்கியமான கோவில்களில் மிகவும் பிரபலமான கோவில் ஆனைமலை மாசாணியம்மன் கோவில், இங்கு தமிழகம், கேரளா, கர்நாடாக, ஆந்திரா மற்றும் பிற மாநிலங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அரசு அறநிலைத்துறை சார்பில் கும்பாபிஷேகம் இன்று நடைபெறுகிறது, கோவில் கோபுரங்கள் அலங்கரிக்கபட்டு உள்ளது, யாகசாலையில் வேத மந்திரங்கள் ஒலிக்க சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது,
அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, மதுவிலக்கு ஆயத்தீர்வு அமைச்சர் செந்தில்பாலாஜி, முதல்வரின் மருமகன் சபரீசன்,கோவில் அறங்காவலர் முரளி கிருஷ்ணா, மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, எம்.பி.ஈஸ்வரசாமி, சார் ஆட்சியர் கேத்தீரின் சரண்யா, டி.ஜ.ஜி, சரவண சுந்தர், மாவட்ட கண்காணிப்பாளர் கார்த்திகேயன், பேரூராட்சி தலைவர் கலைச்செல்வி சாந்தலிங்க குமார், அறநிலை துறை மற்றும் பிற துறை சார்ந்த அதிகாரிகள் கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு உள்ளனர், பொதுமக்கள் சாமி தரிசனம் செய்ய பாதுகாப்பு வழிகள் செய்யப்பட்டு உள்ளது,
பொள்ளாச்சி, ஆனைமலை சுற்று வட்டார பகுதிகளில் இருந்து இன்று சுமார் 2 1/2 லட்சம் பகத்தர்கள் பங்கேற்பார்கள் என காவல் துறை வட்டராத்தில் தெரிவித்தனர்.