விருதுநகரில் தேசபந்து மைதானத்தில் திமுக தோழமை கட்சிகள் மத்திய அரசை கண்டித்து கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலைகளை குறைத்திட கோரியும், வேளாண் சட்டம், குடியுரிமை திருத்த சட்டம், நீட் தேர்வு ஆகியவற்றை ரத்து செய்யக் கோரியும் அரசின் சொத்துக்களை விற்க கூடாது என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக தலைமையிலான தோழமை கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது அதன் ஒரு பகுதியாக இன்று விருதுநகர் தேசபந்து மைதானத்தில் மத்திய அரசை கண்டித்து திமுகவினர் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.