• Tue. Nov 3rd, 2026

அருண் விஜயின் பார்டர் படம் ரிலீஸ் தேதி

‘குற்றம் 23’ என்ற மெடிக்கல்
கிரைம்யை மையமாக வைத்து இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்து ஹிட்டான திரைப்படம்.
இந்த வெற்றி கூட்டணி மீண்டும் இணைந்து பணியாற்றியுள்ள படம் ‘பார்டர்’. சாம் சி.எஸ். இசையமைத்துள்ள இப்படத்தில், நடிகைகள் ரெஜினா கசன்ட்ரா, ஸ்டெபி பட்டேல் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்து இருக்கிறார்கள்.

பார்டர் திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், பார்டர் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி வருகிற நவம்பர் 19-ந் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.