• Thu. Apr 25th, 2024

நம்பியூர் ஒன்றிய அதிமுக சார்பில் சொத்து வரி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஒன்றிய அதிமுக சார்பில் சொத்துவரி, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு உள்ளிட்ட மக்கள் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நம்பியூர் ஒன்றிய அதிமுக செயலாளர்கள் தம்பி சுப்பிரமணியம் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார். எலத்தூர் பேரூராட்சி செயலாளர்கள் கருப்பணன், சேரன் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


நம்பியூர் ஒன்றிய அதிமுக அவைத்தலைவர் விஸ்வநாதன் கண்டன உரை நிகழ்த்தினார்.மக்களின் அத்தியாவசிய தேவைகளான பால் மின் கட்டணம் சொத்து வரி உள்ளிட்ட வரிகளை மிகவும் பல மடங்கு உயர்த்தி உள்ள திமுக அரசை கண்டித்தும் மற்றும் கடந்த ஆட்சி காலத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களான மகளிர்க்கு ஸ்கூட்டி வழங்கும் திட்டம், தாலிக்கு தங்கம், மடிக்கணினி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன அவைகளை மீண்டும் கொண்டு வர வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் மணிகண்ட மூர்த்தி, திருமூர்த்தி, சிவக்குமார், மகுடேஸ்வரன்,உள்பட உறுப்பினர்கள் ஒன்றிய கவுன்சிலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *