தமிழக அமைச்சர்கள் மற்றும் நடிகர் விஜய் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் தங்களின் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினர்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப் பதிவு காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக, தமிழகமெங்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், பொதுமக்கள் காலை முதலே ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.
சென்னை தேனாம்பேட்டை எஸ்ஐஇடி கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் பொதுமக்களுடன் வரிசையில் நின்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்.
தமிழக அமைச்சர்கள் மற்றும் நடிகர் விஜய் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் தங்களின் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினர். வேலூர், காட்பாடி வாக்குச்சாவடியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி, அமைச்சர் ஆகியோர் வாக்களித்தனர். அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யா மொழி, மா.சுப்பிரமனியன் உள்ளிட்ட திமுக முக்கிய பிரமுகர்களும் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினர். தமிழக பாஜக முன்னாள் தலைவரும், தெலங்கானா ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் தனது கணவருடன் வந்து வாக்கு செலுத்தினார். அவர் ,சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்தினார்.
நடிகர் விஜய், நீலாங்கரையில் காலையில் முதல் நபராக வந்து வாக்கு செலுத்திவிட்டு சென்றார். அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, மதுரையிலும் கோவை, சுகுணாபுரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் வாக்களித்தனர். கிருஷ்ணகிரியில் பொதுமக்களுடன் வரிசையில் நின்றபடி வாக்களித்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி சென்னை திருவான்மியூர் வாக்குச்சாவடியில் தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வாக்களித்தார்.