• Tue. Apr 22nd, 2025

விமானங்கள் தரையிறங்குவதில் தாமதம்..,

ByPrabhu Sekar

Apr 16, 2025

சென்னை புறநகர் பகுதிகளில் அதிக காற்றுடன் திடீர் மழை பெய்து வருவதால் விமானங்கள் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

மும்பை மற்றும் ஹைதராபாத்தில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானங்கள் தாமதமாக தரையிறங்கிய நிலையில்,

மேலும் மூன்று விமானங்கள் வானத்தில் வட்டமடித்துக் கொண்டிருக்கின்றன பெங்களூரில் இருந்து சென்னை வந்த இண்டிகோ பயணிகள் விமானம் திருச்சியிலிருந்து சென்னை வந்த இண்டிகோ பயணிகள்விமானம் மும்பையில் இருந்து சென்னை வந்த ஏர் இந்தியா பயணிகள் விமானம்.

என மூன்று விமானங்கள் நீண்ட நேரமாக வானில் வட்டம் அடைத்துக் கொண்டிருக்கின்றன விமானங்களில் புறப்பாடு மற்றும் தரையிறங்குதல் மழையின் காரணமாக 20 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை தாமதமாகி வருகிறது.

சென்னை புறநகர் பகுதிகளான மீனம்பாக்கம் கிண்டி ஆதம்பாக்கம் பல்லாவரம் போன்ற பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக காணப்படுவதோடு மழை பெய்து வருவதால் விமானம் இறங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.