



கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் கல்லூரியில் பாராமெடிக்கல் முதலாம் ஆண்டு மாணவி நான்காவது மாடியில் இருந்து நேற்று மாலை அனுப்பிரியா குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
கோவை இந்துஸ்தான் கல்லூரியில் பாராமெடிக்கல் துறையில் முதலாம் ஆண்டு படித்து வந்த அனுப்பிரியா, நேற்று மாலை மருத்துவமனை வளாகத்தில் இருந்து திடீரென கீழே குதித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை கண்ட மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.


சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பீளமேடு போலீசார், மாணவியின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மாணவி அனுப்பிரியா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து பீளமேடு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் கல்லூரியின் மாணவர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

