• Thu. Apr 25th, 2024

ரஷியாவின் தாக்குதலால் காடுகள் அழிப்பு – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

ByA.Tamilselvan

Nov 10, 2022

ரஷ்யாவின் தாக்குதலால் 50 லட்சம் ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.
உக்ரைன் மீது ரஷிய படைகள் கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதி தாக்குதலை தொடங்கியது. தற்போது வரை தொடர்ந்து நீடித்து வரும் இந்த போரில், இருதரப்பிலும் அதிக உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த போரில் உக்ரைனின் பல்வேறு நகரங்கள் ரஷிய படைகள் வசம் சென்றுள்ளன.
இந்த நிலையில் எகிப்தில் நடைபெற்று வரும் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச உச்சி மாநாட்டில் காணொலி வாயிலாக உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், காலநிலை மாற்றத்துக்கு எதிராக உலகம் போராடுவதை ரஷ்ய போர் தடுப்பதாகவும், திசை திருப்புவதாகவும் குற்றம் சாட்டினார். மேலும் ரஷ்ய அதிபர் புதினின் போர் நடவடிக்கையால் உக்ரேனில் கடந்த ஆறு மாதங்களில் 50 லட்சம் ஏக்கர் வனப்பகுதிகள் அழிக்கப்பட்டு இருப்பதாகவும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *