• Sun. Jul 19th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

அமெரிக்க பாராளுமன்ற இடைக்கால தேர்தல்- 5 இந்தியர்கள் வெற்றி

ByA.Tamilselvan

Nov 10, 2022

அமெரிக்க பாராளுமன்ற இடைக்கால தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 5 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
பிரதிநிதிகள் சபை தேர்தலில் மிசிகன் தொகுதியில் தொழில் அதிபர் ஸ்ரீதனேதர் வெற்றி பெற்றார். இல்லினாய்சில் ராஜா கிருஷ்ண மூர்த்தி, சிலிகான் வேலியில் ரோகன்னா, வாஷிங்டனில் பிரமீளா ஜெயபால், கலிபோர்னியாவில் அமி பெரரா ஆகியோர் வெற்றி பெற்றனர். இதில் ரோகன்னா, ராஜா கிருஷ்ணமூர்த்தி, பிரமீளா ஜெயபால் ஆகியோர் தொடர்ந்து 4-வது முறையாக அதே தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். பிரமீளா ஜெயபால் சென்னையில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேரி லேண்ட் மாகாணத்தின் துணை நிலை கவர்னராக இந்தியா வம்சாவளியை சேர்ந்த அருணா மில்லா முதல் முறையாக வெற்றி பெற்றார்.