சிவகங்கையை சேர்ந்தவர் ஸ்ரீசதன். இவர் சொந்தமாக பேருந்தை வைத்து மதுரை, சிவகங்கை, காளையார்கோவில், மறவமங்கலம் வழியாக இளையான்குடி வரை உள்ள வழித்தடத்தில் தினசரி சேவை வழங்கி வருகிறார்.

இன்று பேருந்தை முத்துக்குமார் என்கிற ஓட்டுநரும், பாலமுருகன் என்கிற நடத்துனரும் இயக்கிவந்த நிலையில் வழக்கம்போல் இளையான்குடி சென்றுவிட்டு மறவமங்கலம், காளையார்கோவில், வழியாக சிவகங்கை நோக்கி சுமார் 50 பயனிகளுடன் திரும்பியுள்ளனர். பேருந்து சிவகங்கையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில் ஏறி, இறங்கியபோது எஞ்சினில் அதிக வெப்பம் காரணமாக திடிரென தீப்பற்றியுள்ளது. இதனை கண்ட ஓட்டுநர் முத்துக்குமார் உடனடியாக பாலத்தின் ஓரம் பேருந்தை நிறுத்தி பயனிகளை உடனடியாக இறங்க செய்துள்ளார்.
இதனை கண்ட அவ்வழியாக சென்ற பொது மக்கள் உடனடியாக தீயனைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கவே சம்பவ இடம் வந்த தீயனைப்பு துறையினர் விரைந்து செயல்பட்டு தீயை அனைத்தனர். இந்நிலையில் இந்த விபத்தை காண அப்பகுதியில் பொது மக்கள் கூடியதால் அதே இடத்தில் இரு இரு சக்கர வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகி இருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

பேருந்து திடிரென தீப்பற்றி எரிந்ததும், பயனிகளை ஓட்டுநர், நடத்துனர் சாமர்த்தியமாக கீழே இறக்கி காப்பாற்றியதும். விபத்தை காண பொது மக்கள் குவிந்ததால் அப்பகுதியில் மேலும் சில விபத்து ஏற்பட்டு இருவர் காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.