• Fri. Jul 18th, 2025
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.56 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.27 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.28 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (1)
previous arrow
next arrow

2 ஏர் இந்தியா பயணிகள் விமானங்கள், திடீரென ரத்து..,

ByPrabhu Sekar

Jun 18, 2025

மேலும் சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்ல வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம், இன்று 6 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

சென்னை விமான நிலையத்தில் 2 ஏர் இந்தியா பயணிகள் விமானமும், சிங்கப்பூர் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானமும், தாமதமாக புறப்பட்டதால், பயணிகள் கடும் அவதி.

டெல்லியில் இருந்து இன்று மாலை 4.15 மணிக்கு, புறப்பட்டு இரவு 7.10 மணிக்கு, சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு வர வேண்டிய ஏர் இந்தியா பயணிகள் விமானமும், சென்னையில் இருந்து இரவு 8.40 மணிக்கு புறப்பட்டு, இரவு 11.25 மணிக்கு, டெல்லி சென்றடையும் ஏர் இந்தியா பயணிகள் விமானமும், இன்று ரத்து என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்று அதிகாலை 5 மணிக்கு, சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்ல வேண்டிய, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம், 6 மணி நேரம் தாமதமாக, இன்று காலை 11 மணிக்கு, சென்னையில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டு சென்றது.

இதனால் இந்த விமானத்தில் சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்வதற்காக வந்திருந்த 252 பயணிகள், கடும் அவதி அடைந்தனர். இந்த விமானம் 6 மணி நேரம் தாமதம் குறித்து, அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், சவுதி அரேபியாவின் தமாமிலிருந்து, அதிகாலை 3.25 மணிக்கு, சென்னைக்கு வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் தான், அதிகாலை 5 மணிக்கு மீண்டும், சென்னையில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டு செல்லும். ஆனால் இன்று அந்த விமானம் சுமார் 6 மணி நேரம் தாமதமாக, காலை 9.25 மணிக்கு தான், தமாமிலிருந்து சென்னைக்கு வந்தது. எனவே சென்னையிலிருந்து சிங்கப்பூர் செல்ல வேண்டிய விமானமும், தாமதமாக புறப்பட்டு சென்றது என்று கூறுகின்றனர்.

சென்னை- டெல்லி, டெல்லி- சென்னை 2 ஏர் இந்தியா பயணிகள் விமானம், நிர்வாக காரணங்களால், இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. பயணிகளுக்கு அது குறித்து தகவல் தகவல்கள் தெரிவிக்கப்பட்டு, அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

ஆனாலும் 2 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து, மற்றொரு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தாமதம் காரணமாக, சென்னை விமான நிலையத்தில், பயணிகள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.