• Thu. Sep 3rd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைப்பு..!

Byவிஷா

Dec 22, 2023

19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 39 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 1968.50 ரூபாய்க்கு விற்கப்பட்ட சிலிண்டர் விலை, தற்போது 1929.50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது மாற்றி நிர்ணயித்து வருகின்றன. இந்த விலை நிர்ணயத்தைப் பொறுத்தவரை சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்யின் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இவைகளுக்கேற்ப மாற்றி அமைக்கப்படும்.
அதன்படி பெட்ரோல், டீசல் விலைகளை தினசரியும், சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை மாதத்திற்கு இருமுறையும் நிர்ணயிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் 1-ம் தேதி எண்ணெய் நிறுவனங்கள் புதிய விலையை நிர்ணயித்து வருகின்றன. இந்நிலையில் இதன்படி சென்னையில் வணிகப்பயன்பாட்டுக்கான 19 கிலோ எடையுள்ள சிலிண்டர் விலை இன்று மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து, சென்னையில் 1968.50க்கு ரூபாய்க்கு விற்கப்பட்ட 19 கிலோ எடையுள்ள வணிக சிலிண்டரின் விலை 39 ரூபாய் குறைந்து 1,929.50ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.