தென்காசியில் 15 வயது முதல் 18 வயதுள்ள இளம் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. மாவட்டத்தில் 42 பள்ளிகளில் 16972 மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முதற்கட்டமாக 18 வயது மேற்பட்டவர்ளுக்கு தட்டுப்பூசி செலுத்தப்பட்டது. இரண்டாம் கட்டமாக 15 முதல் 18 வயது வரை உள்ள இளம் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் இன்று முதல் நடைபெறுகிறது. இன்று சென்னையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் இம்முகாமினை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இளம் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
அதன்படி தென்காசி மாவட்டம், தென்காசி இ.சி.ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் பள்ளியில் 15 முதல் 18 வயதுள்ள இளம் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. தென்காசியில் நடைபெற்ற முகாமை மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தர்ராஜ் தொடங்கிவைத்தார். தென்காசி மாவட்டத்தில் உள்ள 42 பள்ளிகளில் 16972 மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜா, பழனி நாடார்,மாவட்ட செயலாளர்கள் சிவபத்மநாதன், செல்லத்துரை, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ் செல்வி , தென்காசி யூனியன் சேர்மன் சேக் அப்துல்லா,மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.