• Tue. Feb 18th, 2025

குடிபோதையில் குளத்தில் மூழ்கி சின்ன நாட்டாமை பலி!

தென்காசி மாவட்டம் புளியங்குடி ரெங்க கருப்பன் தெருவைச் சார்ந்தவர் மாடசாமி மகன் குருசாமி (33) இவர் சின்ன நாட்டாமையாக பணியாற்றி வருகிறார்.

இவர் நேற்றிரவு அளவுக்கதிகமாக மது அருந்திவிட்டு புளியங்குடி பஸ் நிலையம் அருகே உள்ள நாராயணபேரி  குளத்தின் அருகே சென்ற போது நிலை தடுமாறி உள்ளே விழுந்துள்ளார் அதிகப்படியான போதை இருந்ததால் அவரால் நீந்தி வெளியே வர இயலாமல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் சம்பவத்தை அறிந்த புளியங்குடி போலீசார் குருசாமியின் உடலை மீட்டு புளியங்குடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.