கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கொரோனாவால் பாதிக்கப்பட்டு, தற்போது தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
இது குறித்து கூறியுள்ள அவர், பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இல்லை என்றும் தான் நலமாக இருப்பதாகவும், வீட்டிலிருந்தே ஆன்லைன் வாயிலாக தனது பிரதமர் பணிகளை கவனித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் மக்கள் அனைவரும் தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.