• Thu. Apr 25th, 2024

மத்திய பட்ஜெட்டில் இடம்பெறும் முக்கிய அறிவிப்புகள்

2022-23ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் வாசித்து வருகிறார்.

கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் காகிதம் இல்லா டிஜிட்டல் முறையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டவுள்ளது. பட்ஜெட்டில் இடம் பெறும் முக்கிய அம்சங்கள் குறித்து இப்பக்கத்தில் உடனுக்கு உடன் அறிந்துகொள்ளலாம்.

*பட்ஜெட் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், அஸ்வினி வைஷ்ணவ், பிரகலாத் ஜோஷி உள்ளிட்டோர் நாடாளுமன்ற வளாகத்திற்கு வந்தடைந்தனர்.

*நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் தொடங்கியது.

*மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து தனது உரையை ஆற்றி வருகிறார்.

  • டிஜிட்டல் பொருளாதாரத்தை வளப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன- நிர்மலா சீதாராமன்

*கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை, இந்தியாவை சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளில் இருந்து 100-வது ஆண்டை நோக்கி அழைத்துச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருந்தது- நிர்மலா சீதாராமன்

  • ஏழை மக்களுக்கு எரிவாயு வசதி கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

*5 ஆண்டுகளில் 60 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க இலக்கு

*கதிசக்தி திட்டத்தின் கீழ் போக்குவரத்து கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும்

*அடுத்த 25 ஆண்டுகளுக்கான அடித்தளம் இந்த பட்ஜெட்

*கடந்த பட்ஜெட்டின் முடிவுகளை விட சிறந்த வளர்ச்சி

*எல்ஐசியின் ஐபிஓ விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது

*PLI திட்டங்களுக்கு சிறந்த பதில் கிடைக்கும்

*2022-23ல் தேசிய நெடுஞ்சாலை நெட்வொர்க் 25,000 கி.மீ விரிவாக்கம் செய்யப்படும்.

  • நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்கு ரூ.20,000 கோடி செலவிடப்படும்
  • 3 ஆண்டுகளில் 400 புதிய வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும்.
  • சிறு விவசாயிகள் மற்றும் நிறுவனங்களுக்கான திறமையான தளவாடங்களை ரயில்வே உருவாக்கும். உள்ளூர் தயாரிப்புகளின் விநியோகச் சங்கிலிக்கு உதவ ‘ஒரு நிலையம், ஒரு தயாரிப்பு’திட்டம் கொண்டுவரப்படும்.
  • கிருஷ்ணா- பெண்ணாறு, காவிரி -பெண்ணாறு உள்ளிட்ட 5 நதிகளை இணைக்கும் திட்டங்களுக்கு நிதியளிக்கப்படும்.

*ட்ரோன் தொழில்நுட்பம், பயிர் வகைகளை மதிப்பீடு செய்யவும், நில ஆவணங்களை சரிபார்க்கவும், பூச்சிக் கொல்லிகளின் பயன்பாட்டை இறுதி செய்யவும் பயன்படுத்தப்படும்

*இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக மாநில அரசுகள் மற்றம் சிறு-குறு- நடுத்தர தொழில் நிறுவனங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த திட்டம் ஒன்று அறிவிக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *