2022-23 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் காகிதமில்லா மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார். இது நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் நான்காவது பட்ஜெட்டாகும்.
இன்று காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு வாக்காளர்களை கவரும் வகையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.