• Tue. Sep 17th, 2024

4 மாவட்டங்களில் கொரோனா அதிகரிப்பு

ByA.Tamilselvan

May 27, 2022

உலக முழுவதும் கொரோனா தொற்று ஏற்றம் இறக்கம்த்தோடு காண்ப்படுகிறது. இந்தியாவில் 2000க்குள் இருந்த தொற்று எண்ணிக்கை தற்போது அதை தாண்டியுள்ளது. அதே போலத
தமிழ்நாட்டில் சமீப நாட்களாக கொரோனா மிகவும் குறைந்து வந்தது. 50 க்குள் இருந்த தொற்று எண்ணிக்கை சற்றே உயர்ந்துள்ளது.நேற்றைய கணக்கின்படி 59 பேருக்கு தினசரி கொரோனா தொற்று பதிவாகி இருந்தது.
இந்நிலையில் தற்போது சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதாக மாவட்ட ஆட்சியர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் எழுதியுள்ளார். அவற்றை கட்டுப்படுத்த தீவிர கண்காணிப்பை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் அவர் எழுதிய கடித்தத்தில், தமிழகத்தில் இதுவரை 93.74 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர். 82.55 சதவீதம் பேர் 2வது தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *