லாடக் பகுதியில் நிகழ்ந்த வாகனவிபத்தில் ராணுவ வீரர்கள் சென்று வாகனம் சிக்கி 7பேர் பலியாகியுள்ளனர்.
லடாக்கின் துர்துக் பகுதியில் நிகழ்ந்த வாகன விபத்தில் ராணுவ வீரர்கள் 7 பேர் உயிரிழந்துள்ளனர். வாகன விபத்தில் மேலும் சில ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.ஒரு ராணுவ முகாமிலிருந்து மற்றொரு முகாமிற்கு 26 ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.பர்தாபூர் என்ற இடத்திலிருந்து ஹனிப் என்ற இடத்துக்கு சென்றபோது வாகனம் விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.
வாகன விபத்தில் மேலும் சில ராணுவ வீரர்கள் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
லடாக் வாகனவிபத்தில் ராணுவ வீரர்கள் 7 பேர் பலி
