• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

தேனியில் டி.ஆர்.ஓ., உட்பட 439 பேருக்கு கொரோனா

தேனி மாவட்டத்தில் டி.ஆர்.ஓ., சுப்பிரமணியன் உட்பட 439 பேருக்கு கொரோனா உறுதியானது. ஒருவர் பலியானார்.
கெரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நேற்று முன்தினம் கொரோனா பாதித்தவர்களில் 426 பேர் தேனியை சேர்ந்தவர்கள். 13 பேர் பிற மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.

மொத்தம் 1296 பேர் பரிசோதனை செய்து கொண்டனர். ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டியை சேர்ந்த 36 வயது பெண் கொரோனாவால் பலியானார். இம்மாவட்டத்தை பொறுத்தவரை கொரோனா மூன்றாவது அலையில் பலி 2 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே கம்பத்தை சேர்ந்த 40 வயது ஆண் ஒருவர் பலியானது குறிப்பிடத்தக்கது.

மாவட்டத்தில் சமூக இடைவெளி குறைவு, முகக்கவசம் அணியாததால் இது போன்ற கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் இணைந்து நடவடிக்கை எடுக்கும்பட்சத்தில் கொரோனா தொற்று குறைய வாய்ப்பு உள்ளது.