கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தனியார் பள்ளியில் 6 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை ஒட்டி சக மாணவர்களுக்கு சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ராமன்புதூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் ஒரு மாணவருக்கு கடந்த வெள்ளியன்று கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. அதை தொடர்ந்து சக மாணவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது, மேலும் 5 மாணவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்களுடன் பயிலும் நூற்றுக்கும் மேற்பட்ட சக மாணவர்களுக்கு சளி பரிசோதனை இன்று மேற்கொள்ளப்பட்டதோடு, பள்ளி வளாகத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

குமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில்,
ஒரே பள்ளியில் பயிலும் 6 மாணவர்கள் உட்பட 12 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் துபாயில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து அவர் ஆசாரிபள்ளம் மருத்துவமணையில் அனுமதிக்கபட்டார் அவருடைய சளிமாதிரிகள் ஓமைகாரான் பரிசோதனைக்கு சென்னைக்கு அனுப்பட்டுள்ளது.