எஸ்.சி மற்றும் எஸ்.டி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையில் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் வழக்குப்பதிவு செய்து 52 கல்லூரிகளின் முதல்வர்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
கடந்த 2011ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை பாலிடெக்னிக், கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட 52 கல்லூரிகளில் எஸ்.சி மற்றும் எஸ்.டி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையில் ரூ.17.36 கோடி அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாக தணிக்கைத் துறை அறிக்கை அளித்திருந்தது.அதன்படி, இந்த 52 கல்லூரிகள் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும், 52 கல்லூரிகளின் முதல்வர்களும் விசாரணைக்கு நாளை (டிச.21) நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.