• Mon. Dec 11th, 2023

சமையல் குறிப்புகள்:

Byவிஷா

Mar 18, 2022

கலவை தானிய உருண்டை:
தேவையானவை:
கம்பு, கொள்ளு, பச்சைப் பயறு, காராமணி, கோதுமை, பொட்டுக்கடலை, எள் – தலா கால் கப்,
சர்க்கரை – இரண்டரை கப் (பொடித்துக் கொள்ளவும்), தேங்காய் துருவல் – அரை கப், நெய் – அரை கப்.
செய்முறை:
தானிய வகைகள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக வெறும் வாணலியில் வாசம் வரும் வரை வறுத்து, சற்று ஆறியதும் ஒன்றுசேர்த்து, மெஷினில் கொடுத்து நைஸான மாவாக அரைத்துக் கொள்ளவும். தானிய மாவுடன் பொட்டுக்கடலை, பொடித்த சர்க்கரை, தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கலந்து, உருக்கிய நெய் ஊற்றி பிசிறி, உருண்டை பிடிக்கவும் (சரியாக பிடிக்க வரவில்லை என்றால், சிறிது பால் தெளித்து உருண்டை பிடிக்கலாம்). புரோட்டீன் சத்து நிறைந்த பலகாரம் இது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *