• Wed. Aug 12th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

மதுரை ஆசிரியர்கள் முன்பாகவே மாணவனை தாக்கிய விரகனூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவன்..,

ByKalamegam Viswanathan

Aug 12, 2026

மதுரை விரகனூர் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவன் ஒருவர் அதே பள்ளியில் பயிலும் மாணவர் ஒருவரை ஆசிரியர்கள் முன்பாகவே தாக்கும் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதில் உயர் வகுப்பு படிக்கும் மாணவன் மற்றொரு மாணவனை மிரட்டுவது போலவும், அதனை ஆசிரியர்கள் தடுத்தும் அதனை கேட்காத அந்த மாணவன் – என்ன பண்ணனுமோ பண்ணுங்க ரத்தம் கொட்டும் வாயில தெரிக்கவிடுவேன் என ஆசிரியர் முன்பாகவே சவால் விட்டபடி சக மாணவனை தாக்குவது கதவுகளை எட்டி உதைப்பது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது

இது தொடர்பாக மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தயாளன் பள்ளிக்கு நேரில் சென்று தலைமை ஆசிரியரிடம் வீடியோவில் நடந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினார்.

இதனிடையே சக மாணவனை தாக்கிய உயர் வகுப்பு பயின்ற மாணவனின் பெற்றோர் தனது மகனின் செயலுக்கு வருத்தம் தெரிவித்து டிசியை வாங்கிசென்றுள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில் வீடியோவில் தாக்கும் மாணவன் சில நாட்களுக்கு முன்பாக பள்ளியில் பயிலும் மாணாக்கர்களிடம் சண்டையிட்டது தொடர்பாக ஏற்பட்ட பி்ரச்சனையில் சக மாணவனை ஆசிரியர்கள் முன்பாகவே தாக்கியதும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இந்த வீடியோ யார் மூலமாக சமூகவலைதளங்களில் பரவியது என்பது குறித்த விசாரணையும் நடைபெற்றுவருகிறது.

தாக்குதலுக்கு உள்ளான மாணவனுக்கு குழந்தைகள் மன நல ஆலோசகர் மூலமாக மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டன.