ரவை மசாலா தோசை:
தேவையான பொருட்கள்:
ரவை – 150 கிராம் தயிர் – அரை கப் உருளைக்கிழங்கு 2 வெங்காயம் – 2 பச்சைமிளகாய் – 2 தக்காளி – 2 இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி சோம்பு – தாளிக்க கறிவேப்பிலை, கொத்தமல்லி – தேவையான அளவு உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை:
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி மசித்து கொள்ளவும். ரவையில் தயிர் சேர்த்து அரை மணிநேரம் ஊற வைத்துக்கொள்ளவும். அதன்பின் அதனை மிக்ஸியில் போட்டு மாவு பதத்திற்கு அரைக்கவும். கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம். இந்த மாவை உப்பு சேர்த்து கரைத்து 4 மணிநேரம் புளிக்க வைக்கவும். கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அடுத்து அதில் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி குழைய வதங்கியதும் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து பச்சை வாடை போகும்வரை வதக்கவும். அதன்பின் மசித்து வைத்துள்ள உப்பு, உருளைக்கிழங்கை அதில் சேர்த்து அடிபிடிக்காமல் கிளறவும். பின்பு கொத்தமல்லி தூவி இறக்கி ஆற விடவும். இப்பொழுது தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசையாக ஊற்றி சுற்றி எண்ணெய் விட்டு ஒரு புறம் வெந்ததும் செய்து வைத்த மசாலாவை தோசையின் நடுவில் வைத்து உருட்டி சதுரமாகவோ அல்லது நீளவாக்கிலோ மடித்து எண்ணெய் ஊற்றி திருப்பி போடவும். இப்பொழுது சூப்பரான ரவா மசாலா தோசை ரெடி.
- தங்கம், வெள்ளி விலை நிலவரம்..!தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் […]
- பிரம்ம முகூர்த்தம் பற்றிய பதிவுகள்…பிரம்ம முகூர்த்த ரகசியத்தைப் பற்றி அதிகாலையில் எழு, பல நன்மைகளைத் தரும் என்று சாஸ்திரங்களும் விஞ்ஞானமும் […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 10: அண்ணாந் தேந்திய வனமுலை தளரினும்பொன்னேர் மேனி மணியிற் றாழ்ந்தநன்னெடுங் கூந்தல் நரையொடு […]
- அதிமுக பொதுக்குழு வழக்கு – இன்று விசாரணை!!அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.அதிமுக. பொதுக்குழு […]
- பெண் குழந்தையை மேலோங்கி பார்த்த புத்தர்!!பெண் குழந்தைகளை பிரியமாய் நேசித்தவர் பகவான் புத்தர்.ஒருமுறை அவர் ஷ்ராவஸ்தியில் கோசல மன்னன் பசேந்தி புத்தரிடம் […]
- அழகு குறிப்புகள்முகப்பருக்கள் மறைய: முகப்பருக்கள் மாறி முகம் பொலிவு பெற, முட்டையின் வெள்ளைக் கருவினை எடுத்து அதில் […]
- அதிபர் புதினுக்கு அமெரிக்கா பார்க்கில் சிலை..அமெரிக்காவிலுள்ள நியூயார்க் சிட்டியின் சென்ட்ரல் பார்க்கில் (Central Park) இருக்கும் சிறுவர்களுக்கான விளையாட்டுப் பகுதியில் ரஷ்ய […]
- சமையல் குறிப்புகள்பச்சைப்பயறு கிரேவி:தேவையான பொருள்கள் –பச்சை பயறு – அரை கப், தக்காளி – 1, இஞ்சி […]
- காமன்வெல்த் போட்டியில் பதக்கங்களை குவித்த இந்தியர்கள்காமன் வெல்த் போட்டியில் பதக்கங்களை இந்தியா குவித்து வருகிறது.பர்மிங்காமில் நடைபெற்றுவரும் காமன் வெல்த் போட்டியில் இந்தியா […]
- நினைவில் இருந்து விலகாத ஹிரோஷிமா, நாகாசாக்கி குண்டு வீச்சு நாள்…77 ஆண்டுகளுக்கு முன் இரண்டாம் உலகப்போரில் ஜப்பானை வீழ்த்த அந்நாட்டின் ஹிரோஷிமா, நாகாசாக்கி நகரங்களில் அணுக்குண்டு […]
- சீமானின் சொகுசு காரும்..கிளம்பிய சர்ச்சையும்நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாங்கியுள்ள சொகுசு கார் புதிய சர்சைகளை கிளப்பியுள்ளது.நாம் தமிழர் […]
- சர்வதேச செஸ் கூட்டமைப்பு துணை தலைவராக விஸ்வநாதன் ஆனந்த் தேர்வுதமிழகத்தை சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் சர்வதேச செஸ் கூட்டமைப்பு துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.சென்னையில் 44வது செஸ் […]
- பொது அறிவு வினா விடைகள்விண்வெளிக்குச் சென்ற முதல் விலங்கு ?நாய் விண்வெளிக்குச் சென்ற முதல் நாயின் பெயர் ?லைகா முதன் […]
- இன்றைய ராசி பலன்மேஷம்-சாந்தம் ரிஷபம்-வெற்றி மிதுனம்-விருத்தி கடகம்-லாபம் சிம்மம்-உயர்வு கன்னி-முயற்சி துலாம்-யோகம் விருச்சிகம்-பரிவு தனுசு-பிரீதி மகரம்-நன்மை கும்பம்-நட்பு மீனம்-வெற்றி
- வடதமிழக மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் வருகிற 11-ந்தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை […]