

வெந்தயக்கீரை கட்லட்:
தேவையானவை
வெந்தயக் கீரை : 1 கட்டு (பொடியாக நறுக்கியது), வெங்காயம் : பொடியாக நறுக்கியது கொஞ்சம், கடலை மாவு : 150 கிராம், சோள மாவு : 150 கிராம், இஞ்சி, பூண்டு விழுது : சிறிது, மஞ்சள் தூள் : 1ஃ2 டீஸ்பூன், மிளகாய் தூள் : காரத்திற்கேற்ப, கறிமசால் தூள் : 1 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் : தேவையான அளவு
செய்முறை
ஒரு பாத்திரத்தில் வெந்தயக்கீரை, கடலை மாவு, சோள மாவு, இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கறிமசால் தூள், உப்பு மற்றும் சூடான எண்ணெய் சிறிது ஊற்றி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து, சிறு, சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெய்யில் பொரித்தெடுக்கலாம். அல்லது வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, வெங்காயம் மற்றும் கீரையை சற்றுநேரம் வதக்கிய பின் மேற்கூறிய அனைத்துப் பொருட்களும் கலந்து சிறு, சிறு உருண்டைகளாக உருட்டி ரஸ்க் தூளில் புரட்டி தோசைக்கல்லில் வட்டமாக தட்டி நெய் ஊற்றி இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும். சுவையான மேத்தி கட்லெட் ரெடி.
