• Thu. Dec 12th, 2024

நாடு முழுவதும் சமையல் எண்ணெய் விலை குறைப்பு..!

Byவிஷா

May 4, 2023

நாடு முழுவதும் சமையல் எண்ணெய் விலை குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
உலகச்சந்தையில் பாமாயில், சூரியகாந்தி எண்ணெய், சோயாபீன் எண்ணெய் ஆகிய சமையல் எண்ணெய்களின் விலை குறைந்துள்ள நிலையில் இந்தியாவிலும் சமையல் எண்ணெய் விலையை குறைப்பதற்காக மத்திய அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்தது. இதனை தொடர்ந்து சர்வதேச சந்தையில் சமையல் எண்ணெய் சரிந்தால் அதற்கேற்ப இந்தியாவிலும் எண்ணெய் விலையை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறியிருந்தது.
இந்நிலையில் அதனை ஏற்று பல சிறிய எண்ணெய் நிறுவனங்கள் தங்களது எம்.ஆர்.பி விலையை 6சதவீதம் வரை குறைத்திருக்கிறார்கள். முக்கியமாக இந்தியாவின் முக்கிய எண்ணெய் விற்பனையாளர்களான பார்ச்சூன் லிட்டருக்கு 5 ரூபாய் குறைத்துள்ளது. தொடர்ந்து மற்ற நிறுவனங்களும் விலையை குறைக்க இருக்கின்றன.