• Mon. Aug 10th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைகூட்டம்..,

ByK Kaliraj

Aug 10, 2026

அஇஅதிமுகழகம் சார்பாக… வரும்:14.08.2026 வெள்ளிக்கிழமை அன்று…
அனைத்து வருவாய் மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
நடைபெறவுள்ளது.

அன்று விருதுநகர் மாவட்டத்தில் கழக அமைப்பு செயலாளர், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் திரு.K.T.ராஜேந்திர பாலாஜி அவர்கள் தலைமையில் நடைபெற இருக்கின்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் குறித்தும் அதனை சிறப்புடன் நடத்துவது குறித்தும்

விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஜெய பெருமாள் தலைமையில் அருப்புக்கோட்டையில் நடைபெற்றது.

கழக கொள்கை பரப்பு துணை செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான
சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட கழக இணை செயலாளர் சித்ரா, மாவட்ட கழக துணை செயலாளர்.ராமர்,கழக அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவு துணை செயலாளர் வீரேசன், அருப்புக்கோட்டை நகர செயலாளர் சேதுபதி, அருப்புக்கோட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் அசோக் வேல்ச்சாமி, அருப்புக்கோட்டை சாத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சண்முகக்கனி, சாத்தூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் தேவதுரை, வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் முனியசாமி, வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய கழக செயலாளர் கிருஷ்ணமூர்த்தி,மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி இணை செயலாளர் A.R.மணிகண்டன், உள்ளிட்ட கழகத்தின் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி வரும் கழக நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.