
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்து அமைப்புகளுடன் காவல் துறையினர் ஆலோசனை கூட்டம் நடத்தினர். கூட்டத்திற்கு டிஎஸ்பி ராமலிங்கம் தலைமை தாங்கினார். மண்டல துணை தாசில்தார் ஜெயபாரதி, இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

கூட்டத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை வழக்கம் போல் எவ்வாறு நடத்துவது என்றும், அரசின் நெறிமுறைகளை சுட்டிக்காட்டி கலந்துரையாடப்பட்டது .ஊர்வலத்தை எந்த பிரச்சனையும் இன்றி சமூகமாக நடத்தி முடிக்க வேண்டும் என்று டி எஸ் பி பேசினார் .கூட்டத்தில் இந்து முன்னணி சார்பில் மாவட்ட செயலாளர் டாக்டர் எஸ்.பி.எம் செல்வம், செயற்குழு உறுப்பினர் மொக்கராஜ் ,நிர்வாகிகள் மனோஜ் குமார், முத்து வன்னியன், கனகராஜ், பாண்டியராஜ் ஆகியோரும், இந்து மக்கள் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் ,நிர்வாகிகள் தினேஷ் குமார் , முத்துகுமார்,ஹரி ஆகியோரும் விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்டத் தலைவர் கண்ணாயிரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
