• Tue. Dec 10th, 2024

மதுரையில் போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி…

Byகுமார்

Aug 20, 2022

மதுரையில் மருந்தக உரிமையாளர்கள் சார்பில் நடைபெற்ற போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணியில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.

தமிழகம் முழுவதும் கடந்த 11- ந்தேதி முதல் ஒரு வாரம் வரை போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.போதை பொருள்களுக்கு எதிராகவும், போதை பொருள் பயன்பாட்டின் தீமையை எடுத்துக்கூறும் வகையிலும் பல்வேறு பகுதிகளில் அரசு மற்றும் தனியார் அமைப்புகளின் சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரை மாநகர காவல்துறை மற்றும் மதுரை மாவட்ட மருந்தக உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மருந்தக உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் கலந்து கொண்டனர். மதுரை தமுக்கம் மைதானத்தில் தொடங்கிய விழிப்புணர்வு பேரணிக்கு C& D மெடிக்கல் அசோசியேசன் தலைவர் கணேசன் தலைமையிலும்சிஎன் டி மெடிக்கல் அசோசியேசன் பொதுச் செயலாளர் சரவணன் பொருளாளர் சண்முகராஜ் மற்றும் இணைச் செயலாளர் ரகுபதி ஆகியோர் முன்னிலையில் காவல் துணை ஆணையர் மோகன்ராஜ் மற்றும் பெஸ்ட் மணி கோல்ட் நிர்வாக இயக்குனர் ஜெகநாத்மிஸ்ரா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தமுக்கம் மைதானம் தொடங்கி கோரிப்பாளையம் சிக்னல், அரசு இராஜாஜி மருத்துவமனை வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இப்பேரணியானது நிறைவு பெற்றது. பேணியில் போதைப்பொருள்களுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், முழக்கங்களை எழுப்பியும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.