• Wed. Feb 12th, 2025

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு

Byகுமார்

Mar 16, 2024

சாதிய வன்மத்தோடு பேசி வரும் மதுரை மாவட்ட ஆட்சியர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு..,

மதுரை மாவட்டம் தீர்த்தக்காடு பகுதியில், ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்றுவது தொடர்பாக வந்த புகாரின் கீழ், மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டிருந்தார்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சங்கீதாவை சந்தித்து விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் பேசிய போது.., வீடு கட்டுவதற்கு மட்டுமே அனுமதி எனவும், ஆக்கிரமிப்புகள் இருந்தால் அகற்றுவேன். முடிந்தால் என்ன செய்ய முடியுமோ செய்யுங்கள் என கூறிவிட்டு, சாதிய வன்மத்தோடு பேசியதாக கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சி முதன்மை செயலாளர் பாவரசு தலைமையில் மதுரை மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் புகார் மனு அளித்தனர்.

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதன்மை செயலாளர் பாவரசு : மதுரை மாவட்ட ஆட்சியர் சாதிய வன்மத்தோடு பேசி வருவதாகவும், மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விடுதலை சிறுத்தை கட்சியின் கொடிகளை அகற்றி வருவதாகவும், இது தொடர்பாக அமைச்சர் மூர்த்தியிடம் கூறியும் கண்டு கொள்ளவில்லை எனவும், மாவட்ட ஆட்சியர் தங்களை இழிவுபடுத்தும் வகையில் சாதிய வன்மத்தோடு பேசுவதால் மாவட்ட ஆட்சியர் சங்கீதா மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்துள்ளோம் என்றார். திமுக கூட்டணியில் இடம் பெற்ற நிலையில் விசிகவினர் மீது இது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்வது குறுத்து முதலமைச்சர் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றார். நிகழ்வில் கிழக்கு மாவட்டச் செயலாளர் அரச முத்துப்பாண்டியன் பஞ்சமி நிலமீட்பு மாநில செயலாளர் சசி அலங்க செல்வரசு.மாவட்ட பொருளாளர் முத்தமிழ் பாண்டியன் மணிபரசு குமார் வளவன். உள்பட விசிக பொருப்பாளர்கள் கலந்து கொண்டனர்.