மதுரை மாவட்டம், சோழவந்தான் பூமேட்டு தெரு வைகை ஆற்றங்கரையில், அருள்மிகு உச்சி மாகாளியம்மன் கோவில் வடக்கத்தி காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வருடம் தோறும் பங்குனி மாதம் உற்சவ திருவிழா நடைபெறுவது வழக்கம். இதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டும் திருவிழாவிற்கான கொடியேற்றுதல் நிகழ்ச்சி கடந்த வாரம் நடைபெற்று, பொதுமக்கள் காப்பு கட்டி விரதம் இருந்து வந்தனர் . விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திருவிளக்கு பூஜை கோயில் வாசலில் நடைபெற்றது. இதில் சுமார் 100க்கும் மேற்பட்ட பெண்கள் திருவிளக்கு ஏற்றி அம்மனை வழிபட்டனர். திருவிளக்கு பூஜையில், கலந்து கொண்ட பெண்கள் அனைவருக்கும் எண்ணெய் திரி குங்குமப்பொட்டு உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து, கோயில் வளாகத்தில் பக்தி சொற்பொழிவும் நடைபெற்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் தீபாதாரணை நடைபெற்றது.
திருவிளக்கு பூஜைக்கான ஏற்பாடுகளை, தொழிலதிபர் மணி முத்தையா, வள்ளி மயில் மற்றும் சோழவந்தான் அரிமா சங்கத் தலைவர் டாக்டர் மருது பாண்டியன் குடும்பத்தினர் செய்திருந்தனர் . திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அக்னிச்சட்டி, பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி வருகின்ற 19ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை நடைபெற உள்ளது.