• Sat. Oct 3rd, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

அரசுப் பணிகளில் சமூக நீதி கொள்கைகளை செயல்படுத்த குழு- தமிழக அரசு

ByA.Tamilselvan

Nov 8, 2022

அரசுப் பணிகளில் அனைத்து நிலைகளிலும் சமூக நீதி கொள்கைகள் செயல்படுத்த குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், ‘அரசுப் பணிகளில் அனைத்து நிலைகளிலும் சமூக நீதி கொள்கைகள் செயல்படுத்திட உரிய சட்டத்தை இயற்றுவது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏதுவாக நிர்வாக சட்ட நிபுணர்களையும், மூத்த வழக்கறிஞர்களையும் கொண்ட சட்ட வல்லுநர் குழு ஒன்றினை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது. இந்த குழுவில், சுப்ரீம் கோர்ட் மாநில அரசு கூடுதல் வழக்கறிஞர் தலைமையில் சட்ட நிபுணர்கள், மூத்த வழக்கறிஞர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பிற அலுவலர்கள் அடங்கியுள்ளனர்.