• Sat. Oct 3rd, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

மீனவர் வலையில் சிக்கிய ராக்கெட் வெடிகுண்டால் பரபரப்பு

ByA.Tamilselvan

Nov 8, 2022

மீனவர்களின்வலையில் சிக்கிய ராக்கெட் வெடிகுண்டு குறித்து கடலோர காவல் படை குழும போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆர்.புதுப்பட்டிணம் கிராமத்தைச் சேர்ந்த கணேசன், வடிவேல் ஆகிய இருவரும் பைபர் படகில் கடலில் மீன் பிடிக்க சென்றனர். பின்னர் கரை திரும்பிய பிறகு படகில் கொண்டு வந்திருந்த மீன் மற்றும் நண்டுகளை எடுத்துவிட்டு பாசிகளை சுத்தம் செய்யாமல் வலையை கடற்கரையில் போட்டு விட்டு சென்றனர். இரண்டு நாட்கள் கழித்து நேற்று மதியம் வலையில் இருந்த பாசிகளை சுத்தம் செய்த போது அந்த வலையில் ராக்கெட் வெடிகுண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த கடலோர காவல்படை குழும போலீசார் வெடிபொருளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெடிபொருள் வெடித்தால் அதிக சேதத்தை ஏற்படுத்தக் கூடும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ராக்கெட் குண்டை பத்திரமாக அப்புறப்படுத்தி மணல் மூட்டைகள் அடுக்க வைத்தனர். இந்த வெடிபொருள் சிக்கியது எப்படி, தீவிரவாதிகள் யாரேனும் இந்த பகுதியில் உள்ளனரா என்பது குறித்து தீவிர விசாரணையில் கடலோர காவல் படை குழும போலீசார் ஈடுபட்டுள்ளனர்.