வர்த்தக கியாஸ் சிலிண்டர் விலை அதிரடியாகஉயர்ந்துள்ளது வணிகர்களை அதிர்சியில் ஆழ்த்தியுள்ளது.
சமையல் கியாஸ் மற்றும் பயன்பாடு கியாஸ் சிலிண்டர் விலையை மத்திய எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் நிர்ணயித்து வருகின்றன.கடந்த சிலமாதங்களாகவே வர்த்தக பயன்பாட்டு சிலிண்டர் விலை வரலாறுகாணதவகையில் உயர்ந்துள்ளது. உணவகங்களில் டீ,காப்பி உள்ளிட்டை உணவு பொருட்கள் விலை உயரத்தொடங்கியுள்ளன.அதே போல வீட்டுச்சமையல் கியாஸ் சிலிண்டர் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.இந்நிலையில் மீண்டும் விறகு ,மண்ணெண்னை அடுப்புக்கு மாறிவிடலாமா என மக்கள் யோசித்து வருகின்றனர்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் கியாஸ் கிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.ஆனால் சர்வதேச சந்தையில் விலை குறையும் போது எரிபொருட்கள் விலை குறைக்கப்படுவதில்லை.. ஒவ்வொறு மாதமும் 1-ம் தேதி எண்ணெய் நிறுவனங்கள் புதிய விலையை நிர்ணயித்து அறிவிக்கின்றன.அந்த வகையில் இந்த மாதத்திற்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.102.50 என அதிரடியாக உயர்ந்துள்ளது.
அதன்படி, 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் ரூ. 102.5க்கு உயர்ந்துள்ளது. இதுவே, 5 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டரின் விலை ரூ. 655-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதனால், வணிக பயன்பாட்டிற்கான எல்.பி.ஜி. சிலிண்டரின் விலை ரூ. 2,253-லிருந்து ரூ. 2,355.50- ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.