தென்காசி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கரின் நினைவுநாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தென்காசி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் ஆலோசனையின் பேரில் நகர செயலாளர் சாதிர் தலைமையில் அண்ணல் அம்பேத்கரின் 65வது நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தென்காசி கிழக்கு ஒன்றிய செயலாளர் அழகுசுந்தரம், கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சீனித்துரை கடையம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் மருத்துவர் மாரிமுத்து, விவசாய அணி அமைப்பாளர் குற்றாலம் குட்டி, வழக்கறிஞர் அணி அமைப்பாளர் வேலுச்சாமி, கூட்டுறவு சங்க தலைவர் சுரேஷ் உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.