• Mon. May 25th, 2026
WhatsAppImage2026-05-22at0509101
previous arrow
next arrow
Read Now

மருதமலை பக்தர்கள் நடைபாதையில் உணவு தேடி நின்ற ஒற்றைக் காட்டு யானை..,

BySeenu

May 25, 2026

கோவை மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற ஆன்மீகத் தலமான மருதமலை முருகன் கோயில் பக்தர்கள் நடந்து செல்லும் மலைப் பாதையில், வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை ஒன்று நேற்று மாலை உலா வந்த சம்பவம் தற்பொழுது சமூக வலைதளங்களில் வீடியோவாக வெளியாகி, பக்தர்கள் இடையே அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

நடைபாதை கடைகளை ஒட்டி அந்த யானை உணவைத் தேடி உலா வந்த காட்சிகளை, அங்கு இருந்த நபர் ஒருவர் தனது மொபைல் கேமராவில் பதிவு செய்ய, அது தற்பொழுது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

​கோவை மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியின் அடிவாரத்தில் அமைந்து உள்ள மருதமலை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், சுமார் 800 ஆண்டுகள் பழமையானதும், முருகப்பெருமானின் ஏழாவது படை வீடாக பக்தர்களால் போற்றப்படும் இந்தத் திருக்கோயிலுக்குத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இந்த மலைக்கோயில் அடர்ந்த காட்டின் எல்லையை ஒட்டி அமைந்து உள்ளதால், கோடைக் கால வறட்சி காரணமாக யானை, காட்டெருமை, சிறுத்தை, மான் போன்ற வனவிலங்குகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி அடிவாரப் பகுதிகளுக்கு வருவது வழக்கமான ஒன்றாக உள்ளது.

​இந்நிலையில், நேற்று மாலை மருதமலை பக்தர்கள் நடந்து செல்லும் பிரதான மலைப் பாதையில், வந்த ஒற்றைக் காட்டு யானை ஒன்று மலைப்பாதையின் அமைந்து உள்ள நடைபாதை கடைகளில் அருகே வந்த அந்த யானை, அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டு இருக்கும் பழங்கள் அல்லது உணவுப் பொருட்கள் ஏதேனும் கிடைக்கிறதா ? எனத் தேடிய உள்ளது.

​சிறிது நேரம் அங்கேயே முகாமிட்டு உணவைத் தேடிய அந்த ஒற்றை யானை, யாருக்கும் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாமல், பின்னர் சாதுவாகத் தானாகவே மீண்டும் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று உள்ளது.

இதனை அங்கு இருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து உள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

மருதமலைக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பைக் கருதி, வனத்துறையினர் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் மலைப்பாதையில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும், யானைகளை அடர்ந்த காட்டுக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.