• Fri. Apr 18th, 2025

அமைச்சர் பொன்முடியை விடக் கூடாது – தலைமை ஜீயர் காட்டம்

BySeenu

Apr 13, 2025

அமைச்சர் பொன்முடியை இந்துக்கள் எங்கு பார்த்தாலும் விடக் கூடாது என தலைமை ஜீயர் கோவையில் காட்டமாக தெரிவித்து உள்ளார். கோவையில் மன்னார்குடி தலைமை ஜீயர் ஸ்ரீ செண்டலங்கார செண்பகம் மன்னார் சம்பத்குமார் ராமானு செய்தியாளர்களை சந்தித்தார்,

அப்போது மன்னார்குடி தலைமை ஜீயர்..,

அமைச்சர் பொன்முடி கேவலமாக பேசக்கூடியவர். இன்னும் அவர் அமைச்சர் பதவியில் இருக்கிறார். அவரை அமைச்சர் பதவியில் இருந்த நீக்கி கைது செய்ய வேண்டும் என வலியுறுத்திய அவர், இந்து தர்மத்தை கேவலமாக பேசக்கூடியவர்கள் அமைச்சர்களாக உள்ளனர் என்றும், திராவிட மாடல் கட்சியில் பொன்முடியை ப்ரைம் மினிஸ்டர் பதவியில் இருந்தா நீக்குனாங்க, அது கட்சி பதவி ஒரு பதவியா என கேள்வி எழுப்பிய அவர் தமிழக அரசுக்கு தைரியம் இருந்தால் பொன்முடியை கைது செய்து அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும், முதல்வருக்கு தைரியம் இருந்தால் அவரை கைது செய்ய வேண்டும் எனவும், பெண்களை ஓசி என கேவலாக பேசினார். இப்போது சைவம், வைணவம் குறித்து அவதூறாக பேசியுள்ளார் என்றும், இந்துக்களுக்கு தைரியம் இருந்தால் தைரியம் உள்ள இந்துக்கள் சூடு, சொரணை இருந்தால் அந்த அமைச்சர் எங்கிருந்தாலும் விடக்கூடாது என காட்டாமாக தெரிவித்தார் . தொடர்ந்து இந்துக்களுக்கு துரோகம் இல்லாத கூட்டணி அமையனும். லூட்டி அடிக்க கூடிய, கொள்ளை அடிக்க கூடிய துறை இருக்கு என்றால் அது இந்து சமய அறநிலையத்துறை தான் என விமர்சித்த அவர், இந்து விரோத துரோகிகள் கோவில், கோவிலாக அழைகிறார்கள்.

குடமுழுக்கு தமிழில் மேற்கொள்ள யாரும் இங்கு விரோதம் இல்லை என உறுதி பட தெரிவித்த அவர், துணை முதல்வர் உதயநிதி சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்கிறார். ஆனால் அவரது அம்மா கோவில், கோவிலாக பந்தவஸ்துடன் சாமிதரிசனம் செய்து வருகிறார். இது நாடகம் என விமர்சித்த அவர், சனாதனத்தை எதிர்ப்பவர்கள் அப்பாவையே மாற்றுவார்கள் என்றார். மேலும், மசூதி சர்ச் முன்பாக அம்மத தர்மத்தை விமர்சிக்க முடியுமா? இந்துக்கள் குறித்து தொடர்ந்து அவதூறு கருத்தை பதவியில் இருப்பவர்கள் தெரிவிக்கின்றனர் என்றார்.