12 மணி நேர வேலை மசோதா குறித்து யாரும் எதிர்பாராத நல்ல முடிவை முதல்வர் எடுப்பார் என அமைச்சர் சேகர் பாபு பேட்டி
தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்துவது தொடர்பான சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகளுடன், திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு , கூறியதாவது, 12 மணி நேர வேலை மசோதா குறித்து முதல் அமைச்சரின் வழிகாட்டுதலின்படி இன்றைய தினம் பொதுப்பணித்துறை அமைச்சர், அமைச்சர் அன்பரன், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் சுமுகமான முடிவுகள் எடுக்கப்படும். இது தொடர்பாக யாரும் எதிர்பாராத நல்ல முடிவை முதல்வர் மு.க. ஸ்டாலின் எடுப்பார் எனவும் உறுதி அளித்தார்.