சோழவந்தான் எம்விஎம் கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தாளாளர் டாக்டர். மருதுபாண்டியன் தலைமையில் ஆண்டு விழா நடைபெற்றது.
மதுரை மாவட்டம் சோழவந்தான் வாடிப்பட்டி ரோட்டில் உள்ள எம் வி எம் கலைவாணி மெட்ரிக் பள்ளியின் ஆண்டு விழா பள்ளி தாளாளர் டாக்டர். மருதுபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. எம் வி.எம் குழும சேர்மன் மணி முத்தையா முன்னிலை வகித்தார் பள்ளி நிர்வாகி எம் வி எம் வள்ளிமயில் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். மாவட்ட நீதிபதி ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பள்ளி முதல்வர் செல்வம் வரவேற்றார். ஆண்டு விழாவையொட்டி நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து பள்ளி மாணவ மாணவியரின் நடன நாட்டிய கலை நிகழ்ச்சிகள், கராத்தே சிலம்பம் யோகா நடைபெற்றது. இதில் ஆசிரிய ஆசிரியர்கள் மாணவ மாணவியர் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.