
ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்தின் பண்முக பயிற்சி முகாம் நிறைவு விழா நடைபெறுகிறது. இதில் பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார் ஆசியுரை வழங்குகிறார் தொடர்ந்து தென் பாரத மக்கள் தொடர்பு துறை செயலாளர் பிரகாஷ் ஜி சிறப்புரை ஆற்ற உள்ளார். தென் தமிழக மாநில தலைவர் ஆடலரசன் பங்கேற்கிறார்.
கோவைப்புதூர் பகுதியில் அமைந்துள்ள கிருஷ்ணா ஆதித்யா கல்லூரியில் கடந்த மே 2 ஆம் தேதி துவங்கி தொடர்ந்து 15 நாட்கள் நடைபெற்ற முகாம் இன்றோடு நிறைவடைகிறது.
தென் தமிழக அளவில் இம்முகாம் நடைபெறுகிறது.
கோவை கோட்ட செயலாளர் அஜய்கோஷ் தலைமையில் நடந்த இம்முகாமில், 900 பேர் பயிற்சியில் இணைந்து பயிற்சி பெற்றனர்.
நிறைவு விழாவான இன்று பண்முக பயிற்சி முகாமில் பங்கேற்ற ஸ்வயம் சேவகர்கள் கற்றுக்கொண்ட கராத்தே, சிலம்பம் , யோகா , சமத்தான் , விளையாட்டு , கோஷ் வாத்திய இசை போன்றவற்றை நிகழ்த்தி காட்ட உள்ளனர்.
மத்திய இணை அமைச்சர் எல் முருகன் முகாமை காண வருகை புரிந்துள்ளார்.
