• Sun. Mar 22nd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

சி.ஐ.டி.யு ஆட்டோ ஓட்டுநர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்..,

BySeenu

Nov 27, 2025

திருவாரூர் மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகே ஆட்டோ நிறுத்தம் அமைக்க அனுமதிக்க கோரி கடந்த அக்.31 ஆம் தேதி சி.ஐ.டி.யு ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்.டி.ஓ அலுவலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஏற்பட்ட பிரச்சனையில் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் போலீஸாரிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து சமாதானம் ஏற்பட்ட நிலையில் ஆட்டோ ஓட்டுநர்கள் கலைந்துச் சென்றனர். இந்நிலையில் கடந்த நவ.17 ஆம் தேதி நள்ளிரவில் சி.ஐ.டி.யு ஆட்டோ ஓட்டுநர் சங்கத் தலைவர் ஹனிபா உள்ளிட்ட ஆட்டோ ஓட்டுநர்களை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் சி.ஐ.டி.யு ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை பி.எஸ்.என்.எல் தலைமை அலுவலம் அருகே சி.ஐ.டி.யு ஆட்டோ ஓட்டுநர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது வேண்டுமென்றே கைது நடவடிக்கையை மேற்கொண்ட துணை காவல் கண்காணிப்பாளர் மணிகண்டன் உள்ளிட்ட போலீஸாரை கண்டித்து கோசங்களை எழுப்பினர். இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் நேரடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆட்டோ ஓட்டுநர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினர்.