


திருவாரூர் அருகே தென்னவராயநல்லூர் அரசு நடுநிலைப்பள்ளியில், சத்துணவு சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
திருவாரூர் அருகே தென்னவராயநல்லூர் அரசு நடுநிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இப்பள்ளியில் நேற்று மதியம் பள்ளிக் குழந்தைகளுக்கு கொண்டைக்கடலையுடன் சத்துணவு வழங்கப்பட்டது. மாலையில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவ, மாணவியருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். திருவாரூர் அரசு மருத்துவமனையில் 39 பேர் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அனைவரும் நல்ல உடல் நலத்துடன் உள்ளனர். சிகிச்சை பெரும் மாணவ மாணவியரை கலெக்டர் மோகனச்சந்திரன் நேரில் பார்வையிட்டார். உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும் பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட மாணவ மாணவியர் அனைவரையும் மருத்துவமனையில் சேர்க்கவும் உரிய சிகிச்சை அளிக்கவும் கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.

