கார்த்திகையை முன்னிட்டு திருவண்ணாமலையில் ஏற்பட்ட மகாதீபம் 11 நாட்களுக்கு எரியும் வகையில் காட்சி அளிக்கும்
அண்ணாமலை உச்சியில் உள்ள பிரமாண்ட கொப்பரையில் 650 கிலோ நெய் ஊற்றி மகாதீபம் ஏற்றப்பட்டது.2668 அடி உயரம் கொண்ட அன்ணாமலை உச்சியில் உள்ள பிரமாண்ட கொப்பரையில் 650 கிலோ நெய் ஊற்றி மகாதீபம் ஏற்றப்பட்டது. சரியாக மாலை 6.01 மணிக்கு தீபம் ஏற்றப்பட்ட நிலையில், 14 கிலோமீட்டர் தூரம் கொண்ட கிரிவலப் பாதையில் பல லட்சம் பக்தர்கள் விண்ணைமுட்டும் அளவிற்கு அரோகரா கோஷம் எழுப்பி வணங்கினர்.செம்பினாலான 6 அடி உயர கொப்பரையில் 3,500 கிலோநெய், 1000மீட்டர் காடா துணியிலான திரியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. இன்று திருவண்ணாமலை மலையில் ஏற்றப்பட்ட மகா தீபம் 11 நாட்களுக்கு எரியும் வகையில் காட்சி அளிக்கும்.